குடும்பனின் பார்வையில்

 [23/01, 08:28] ஆனந்தராஜ் : 

இன்றைய நாளில் போலி வரலாறுகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது இவற்றை முறியடிக்க உண்மை வரலாற்றை பொது மக்கள் மன்றத்திற்கு தக்க சான்றுகளோடு கொண்டு சென்றால்தான் நமது வரலாற்றை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும்!

ஏற்கனவே பட்டியல் சாதியினருக்கு என்ன வரலாறு இருக்க போகிறது என்று கூறிக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில் நமது வரலாற்றை உரக்க சொன்னால்தான் நமது வரலாறு தப்பும்!

இன்றைய நாளில் பல வரலாற்று தகவல்கள் புதிதாக கிடைத்துள்ளன அவற்றையும் சேர்த்து ஆவணப்படுத்த வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் வலைதளங்களில் தமிழ் பேராசிரியர்கள் வரலாற்று ஆய்வாளர்களை வைத்து வரலாற்றை பேச வைக்க வேண்டும். 

வரலாற்றை ஆராயவும், ஆவணப்படுத்தவும் பெரிய அளவில் வரலாற்று ஆய்வு மையம் உருவாகவேண்டும்!

[23/01, 08:52] ஆனந்தராஜ் : 

வரலாற்று மையம் என்பது வரலாற்று பேராசிரியர்கள், தமிழ் பேராசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழு!

இங்கு கல்வெட்டு செய்திகள், இலக்கியங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து தக்க சான்றுகளுடன் ஆவணப்படுத்தி நூல்களாக வெளியிடுதல்!

காலாண்டுக்கு ஒரு முறை சிறந்த வரலாற்று சிந்தனையாளர்களை அழைத்து சிறப்பு பேச்சரங்கங்களை அமைத்து நமது வரலாற்றை நமது மக்களிடத்தில் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

நமது வரலாறு தெரிந்த மாற்று சமுகத்தினரை சிறப்பு பேச்சாளராக அழைத்து நமது வரலாற்றை பேச வைத்தல்!

உள்ளுர் வரலாற்று பேச்சாளர்களை ஊக்குவித்தல்!

வருடந்தோறும் வரலாற்று கருத்தரங்கங்களை நடத்தி அவற்றை ஆவணப்படுத்தி நூல்களாக வெளியிடுதல்!


விஜயநகர ஆட்சியின் போது வீழ்த்தப்பட்ட மன்னர்கள் பெயர்களை மீண்டும் நினைவு படுத்துதல் !

விஜயநகர ஆட்சிக்கு முன் வரை சேர சோழ பாண்டியர்களாக ஆட்சி புரிந்தவர்கள் பள்ளர்களே என்பதை ஆதாரத்துடன் நிறுவுதல்!

இதுபோன்ற நமது வரலாறு சம்பந்தப்பட்டவைகளை இந்த வரலாற்று ஆய்வு மையம் விவாதிக்கும் வண்ணம் செயல் திட்டங்களை உருவாக்குதல்!

[23/01, 16:58] ஆனந்தராஜ் : பாண்டியர்களின் வரலாற்றை ஐந்து கட்டங்களாக பிரித்து ஆய்வு செய்தால் வரலாற்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

1, விஜயநகர ஆட்சிக்கு முன்பு பாண்டியர்கள் ஆட்சி. ( பிற்கால பாண்டியர்களின் எழுச்சி முதல் 1311- ல் மாலிக் கபூர் படையெடுப்பு , 1323 உலுக்கான் என்ற முகமது பின் துக்ளக் படையெடுப்பு, மதுரை சுல்தான்களின் ஆட்சி 1378 வரையிலான தென்பாண்டிய அரசு மற்றும் கொங்கு மண்டல வரலாறு )


2, விஜயநகர ஆட்சியின் போது பாண்டியர்களின் நிலை .( 1378- 1529 )


3, செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் போது பாண்டியர்கள்.( 1529- 1736) செஞ்சி தஞ்சை நாயக்கர்கள் மதுரை நாயக்கர்களின் வீழ்ச்சிக்கு முன்னரே வீழ்ச்சி கண்டது மதுரை நாயக்கர்களின் ஆட்சி 1736-ல் ஆற்காடு நவாப்பால் முற்று பெற்றது.


4, பாளையக்காரர்களின் ஆட்சியின் போது பாண்டியர்களின் நிலை. (கி.பி 1736- 1802 )

5, ஜமீன்தார்கள் நிர்வாகத்தில் பாண்டியர்களின் நிலை. ( 1803- 1947 )

இந்த முறையில் பிரித்து தகவல்களை திரட்டினால் பல சுவாரசியமான வரலாற்று செய்திகள் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்