குடும்பனின் பார்வையில்
பாண்டியர் - குடும்பர் தொடர்பும், திருடர்கள் கூட்டத்தை ஓடவிட்டு தலையறுத்த பாண்டியரும்!
.........
பருவமழை இல்லாமல்
பஞ்சம் வந்து சேர்ந்ததய்யா,
நாழி உருண்ட பஞ்சம்
நாயகனைத் தோற்றபஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்- 1670
மன்னவனைத் தோற்ற பஞ்சம்.
பொட்டி உருண்டபஞ்சம்
புருசனைத் தோற்ற பஞ்சம்
மக்களை தான் விற்ற பஞ்சம்
மன்னவரை இழந்த பஞ்சம்.
தாலிகளை விற்றபஞ்சம் சரட்டுக்கயிறு போட்ட பஞ்சம்.
கொள்ளையர்களாதல்
இப்படியாய் பஞ்சகாலம்
ஏதுசெய்வார் கள்ளநாட்டார்.
காஞ்சிபுரம் நாடதிலே
கசவருட பட்டணத்தில்
கள்ள நாட்டார் ஒன்று கூடி
களவுசெய்ய புறப்பட்டார்கள்.
தென்னாடே திருடர்கள் களம்
“தென்னாடு போகனுமே
தீவட்டிக் கொள்ளைப் போடனுமே
கன்னக்கோல் ஆக்கனுமே
கையறுவாள் வல்லயமும்
குத்துக்கம்பு வல்லயமும்
கொடுக்கறுவாள் சமுதாடும்
பூட்டை மெள்ள முறிக்கனுமே -1690
போய்களவு செய்யனுமே,
கன்னமது போட வேண்டும்
களவு செய்து திரும்பவேண்டும்''
பதிமூன்றுபேர் கள்ளநாட்டார்.
பக்குவமாய்ப் புறப்பட்டார்கள்.
தென்னாட்டுக்கு திருடர்கள் பயணம்
காஞ்சிபுரம் நாடுமிட்டு
சைவர் பட்டணம் தான் கடந்து
வன்னிகரந்தை தேவர்குளம்
வன்னிக்குத்தி மறவரய்யா
களவுக்கு ராசாளி கறுப்பண்ணத் தேவரவர்.
தேவர்குளம் நாடதிலே
சேகரமாய் வீற்றிருந்தார்.
அன்றுபகல் கழிந்த பின்னே
அத்த ராத்திரி பயணம் வைத்தார். -1700
நெல்லையப்பரை வணங்கல்
அழகியபாண்டி புரமும் விட்டு
அவசரமாய் வாரார்கள்,
மானூறு விலக்குமிட்டு மற்றந்த கள்ளநாட்டார்
ராமையம்பட்டி தான் கடந்து- 1710
நலமான கள்ள நாட்டார்
நெல்லையம்பலம் நாடதிலே
நெல்லையப்பரை வணங்கிவிட்டு
குறுக்குத்துறை தான் கடந்தார்
கொள்ளை போடும் கள்ள நாட்டார்.
வீரபத்திரர் வீடுவரல்
விளாகத்து விலக்கு மிட்டு
வேகமுடன் வாரார்கள்.
தாம்பிரவண்ணி நதியுமிட்டு
தானே வாரார் கள்ளநாட்டார்.
முன்னீர் பாளையம்ஊரதிலே -1720
முந்திக் கருக்கலிலே வாரர்கள்,
துப்புவாதி வீடதிலே
துரிதமுடன் வாரார்கள்.
அத்தசாம நேரத்திலே
அடைகதவு தட்டலுற்றார்.
வீரபத்திரத் தேவர்
வேசுமுடன் எழுந்திருந்தார்.
வீரரின் கோபம்
'ஆரடா ஏ பயலே
அடைகதவு தட்டுறவன்?
பாளையப்பட்டு நானிருக்கப் பயமில்லாமல் வந்ததென்ன?
ஊரும் பேரும் சொல்லாவிட்டால்
உயிரை மெல்ல வாங்கிடுவேன்''' என்று சொல்லுற வேளையிலே
கறுப்பசாமியின் கூற்று
ஏதுசொல்வார் கள்ள நாட்டார்.
“களவுக்குத் தலைவன் அண்ணே
கறுப்புசாமி வந்தேன் அண்ணே.
காஞ்சிபுரம் கறுப்பனென்றால்
கடவுளுக்கும் அஞ்சமாட்டான்"
வந்தவரை வரவேற்றல்
கறுப்பசாமி என்றபோது -1740
கதவை மெள்ள திறக்கலுற்றார். 'வாரும் பிள்ளாய் தம்பி" என்றார்.
வந்தசேதி சொல்லு மென்றார்.
கறுப்பசாமி தேவர்தானே
கட்டுடனே ஏதுசொல்வார்.
"பன்னிரெண்டு வருடகாலம்
பாரில் மழை பெய்ய வில்லை.
பஞ்சம் வந்து சேர்ந்ததினால்
பார்க்க வந்தோம் தென்னாடு
களவு செய்ய வந்தோமெ'ன்று
கட்டழகர் சொல்லலுற்றார். -1750
தேவர் சொன்ன துப்பு
வீரபத்திரத் தேவரவர்
வேகமுடன் ஏது சொல்வார்
“களவு செய்ய இடமுமில்லை.
கன்னம் போட வழியுமில்லை.
இரும்பு ஊசி களவு போனால்
ஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்
ஆனால் ஒரு துப்பதுதான்
அருமையுடன் சொல்லக்கேளும்.
கோபால சமுத்திரத்தில் 1760
குடியிருக்கார் குடும்பக்கமார்.
நாகநல்ல குடும்பனென்றும்
கனக நல்ல குடும்பனென்றும்
பள்ளருட தாவளத்தில்
பணம் அதிகம் இருக்குதய்யா
ஏழுகிடாரத் திரவியந்தான்
இருக்குதய்யா அங்கேதான்
ஆயக்காலில் தொங்குதய்யா
அனுதினமும் கேட்டதுண்டு.
கோபால சமுத்திரம் போனாக்கால்- 1770
கொள்ளை போட்டு வரலாமே.
காவலில்லை கட்டுமில்லை
காவலுக்கோ மறவரில்லை.''
என்று சொல்லும் வேளையிலே
ஏது செய்தார் கள்ள நாட்டார்,
கோபாலசமுத்திரம் அடைதல்
முன்னீர் பள்ளம் நாடு மிட்டு
பாளையங்கால் பாதை கூடி
தருவை நல்ல நாடுமிட்டு
தருமராசா கோவில் விட்டு
பச்சையாறு விலக்கு விட்டு- 1780
பாளையங்கால் கரைவழியே
கிளாக்குடையார் வாசல் வழி
கிருபையுடன் கள்ளநாட்டார்
சீரரமைய்யர் வாசல்' வழி
சீக்கிரத்தில் வாரார்கள்.
பசுங்கிளி அய்யர் வாசல் வழி
பறக்குளம் தான்கடந்து
நாகக் குடும்பனுட வளவதிலே
தலமுடனே வாரார்கள்,
கன்னக்கோல் வைத்தல்
கனகக் குடும்பனுட வளவதிலே -1790
கண்டார்கள் கட்டிடத்தை
கல்லறைத்தான் துளைக்கும்
கன்னக்கோலை எடுத்தார்கள்,
செங்கல்லைத் துளைக்கும்
சிறு ஆக்கராவைத்தான் எடுத்தார்.
அத்தசாம நேரத்திலே
ஆளரவம் இல்லா வேளையிலே
கன்னமது போடலுற்றார்.
கதவுகளைத் தான் திறத்தார்.
கீழ்த்தாளை மேல்த்தாளை -1800
கிருபையுடன் துறக்கலுற்றார்
வெங்கலக் கதவுதன்னை
வேகமுடன் திறக்கலுற்றார்.
தங்க நல்ல களஞ்சியத்தைத்
தான் பார்த்தார் கள்ளநாட்டார்
கவனமுடன் கொள்ளையிடல்
எவ்விதத்தில் களவுசெய்வோம்
எப்படி நாம் கொண்டுபோவோம்.
வாடாத மணிவிளக்கு
வலது பக்கம் எரியுதய்யா.
கள்ளருக்குத் தலைவன்தானே- 1810
கறுப்பசாமி தேவரவர் -
"கலங்காதிங்கோ மயங்கா திங்கோ
காவலுக்கு ஒருவரில்லை" என
எழு கிடாரத் திரவியத்தை
ஏகமுடன் வாரலுற்றார்.
வயிரங்களும் முத்துக்களும் வாரிவாரி கட்டலுற்றார்.
களிப்புடன் குலவையிடல்
கட்டி நல்ல சுமையாக்கி
கழுதைமேல் பொதியேத்தி
கழுதைகளைப் பத்திக் கொண்டு -1820
கைத்தட்டிக் குலவையிட்டார்."
நாகக்குடும்பனுட வளவுமிட்டு
நல்லசிவன் கோவில் விட்டு பாளையங்கால் தான் கடந்து
பதின்மூன்று பேர் கள்ளநாட்டார்
தாம்பிர வன்னி தன்னதிலே
தாகவிடை தான் தெளித்தார்
கருங்காட்டு ஊரதிலே
கடுமையான குலவையிட்டார்.
குலவை கேட்டல்
குலவைச் சத்தம் காதில் கேட்டார். -1830
குழந்தை மெச்சும் பெருமாள் பாண்டியனும்
வண்ணாத்தி வீடு விட்டு
வாராரே பாண்டியரும்.
காச்சிதாயும் பூச்சிநாயும்
கடுமையுட வருதய்யா,
கள்ளருட குலவை சத்தம்
காச்சி நாயும் கேட்டிடுமாம்.
வீமனென்ற நாயதுதான்
வேகமுடன் வருகுதய்யா.
துஷ்டனென்ற நாயதுதான் 1840
துள்ளி ஓடி வருகுதய்யா.
நாயுடனே பின் தொடர்ந்தார்.
தலமான பாண்டியரும்.
கறுப்பசாமியின் கலக்கம்
கள்ளருக்குத் தலைவன்தானே
கறுப்பசாமி ஏது சொல்வான்.
குலவையிட்ட மோசத்திலே
குடிகேடு வந்ததய்யா
வீடு விட்டு வாரபோது
விடியவில்லை பல திசையும்.
கோட்டை வீட்டு வார போது -1850
தகை இருந்து அழுத்துவோ.
என்ன மோசம் வந்திடுமோ
என்று சொன்னார் கறுப்பசாமி.
கள்ளருடன் கடுமையான சண்டை
கறுப்பசாமி சொல்லுமுன்னே
காலை பிடித்திடுமாம் நாயதுதான்
மெச்சும் பெருமாள் பாண்டியனும்
மேகம்போல் விரைந்து வாரார்.
தொட்டிநல்ல பாலத்திலே துள்ளியோடி குதித்தாரய்யா.
சிங்கம்போல பாய்ந்தாரய்யா -1860
சீமான் அந்த பாண்டியனும்
பூனைபோல் பதுங்கலுற்றார்
புலிப்பாய்ச்சல் பாயலுற்றார்.
பதிமூன்றுபேர் கள்ளர்களைப் பாய்ந்து பாய்ந்து வெட்டலுற்றார்.
உற்றதொரு கள்ளர்களை
ஓடி ஓடி வெட்டலுற்றார்.
மெச்சும் பெருமாள் இடமதிலே
மின்னே நிற்பார் ஒருவரில்லை.
பாண்டியனின் வெற்றி
சந்தோசப் பட்டாரே
சமர்த்துள்ள பாண்டியரும் -1870
கழுதைமேல் பொதிகளையும்,
கட்டழகர் தள்ளிவிட்டார்.
ஆயுதத்தை அலம்பியங்கே"
அன்னேரம் ஏது சொல்வார்.
''குலவை சத்தம் எங்கே போச்சி
கூட்டமது எங்கே போச்சி"
என்று சொல்லி பாண்டியரும்
ஏகமுடன் வாராரே,
பள்ளர்களிடம் தெரிவித்தல்
தொட்டிபாலம் தான் கடந்து -1880
துளசிமடம் தான் கடந்து
தாம்பிர வன்னி தான் கடந்து
தானே பாளையங்காலும் கடந்து
நாகக் குடும்பனுட வளவதிலே
நலமான பாண்டியரும்
பள்ளர்களை எழுப்பியல்லோ
பாண்டியரும் ஏது சொல்வார்.
"கனகக் குடும்பா நீ கேளு களஞ்சியங்கள் எங்கே போச்சி
நாகக் குடும்பா உனது -1890
நாட்டாண்மை எங்கே போச்சி
ஏழுகிடாரத் திரவியந்தான்
இருக்குதோ பாருமென்றார்.
பூமியிலே போட்டிருந்தால் பூதங்கொண்டு போகுமென்று,
ஆயக்கால் போட்டுவைத்தாய்
அருமையான திரவியத்தை
வடநாட்டுக் கள்ளர் வந்து வாரிக்கொண்டு போய் விட்டார்.
கருங்காட்டு ஊரதிலே- 1900
கண்டேனே கள்ளர்களை.
ஓடவிட்டு தலையறுத்தேன்
உங்கள் திரவியத்தை நான் காத்தேன்
கழுதையிலே பொதி ஏத்தி கள்ளநாட்டார் கொண்டு போனார்.
பொதி பணத்தைக் குமித்திருக்கேன்
போய் வாரிக்கொண்டு வாங்க
அரண்மனைக்கு தான் போறேன்
அள்ளிவாடா பொன்னை,'' என்றார்.
அரண்மனையில் போய் படுத்தார்- 1910
அழகுப்பிள்ளை பாண்டியரும்.
தப்பிவிட்டான் ஒரு திருடன்
கருங்காட்டு ஊரதிலே
கள்ளருட படுகளத்தில்
பன்னிரெண்டு பேர்களை வெட்டும்போது
பாவி அதிலொருவன்
ஓடி ஓடி வெட்டும்போது
ஒளிந்திருந்தான் ஒருபாவி.
பாண்டியன்தான் போனபோது
பதறிகண்ணை முழித்தானே.
பதறி எழுந்தானே -1920
பலதிசையும் பார்த்தானே.
தப்பிப் பிழைத்தேனென்று தானோடி போறாளே.
பள்ளர்கள் வந்தனர்
பள்ளர்கள் எல்லோரும்
பதறி ஓடி வாரார்கள்.
கருங்காட்டு ஊரதிலே,
கள்ளருட படுகளத்தில்
கால்துண்டா கிடக்கிறதும்
கை துண்டா கிடக்கிறதும்- 1930
தலை துண்டா கிடக்கிறதும்
தான் கண்டார் குடும்பக்கமார்கள்.
கனக நல்ல குடும்பனுட
காலும் கையும் நடுங்குதய்யா
நாகக் குடும்பனுட
நாவு வறளுதய்யா.
திரவியத்தை வாரிக்கொண்டு
சீக்கிரமாய் வாரார்கள்.
பாண்டியர்க்குப் பரிசு
பள்ளருட தாவளத்தில்
பணத்தைக் கொண்டு சேர்த்தார்கள்,
மறுநாளைக் காலையிலே -1940
மன்னா பாண்டியரைப் பார்க்கவந்தார்.
தங்கநல்ல தளுகை யத்தான்
தானெடுத்தார் கையதிலே.
தங்கப்பூவாம் வெள்ளிப்பூவாம்
தானெடுத்து வைத்தார்கள்,
பழவகைகள் எல்லாம்
பரத்தி வைத்தார் தளுகையிலே.
மல்லிகை முல்லைகளுடன்
மலர்ந்த இருவாச்சியும்
இலுமிச்சம் பழமும் கொண்டு- 1950
இன்பமுள்ள குடும்பக்கமார்கள்
ஆயிரம் பொன் ஒரு முடிப்பு
அவசரமாய் எடுத்து வைத்தார்.
ராசாவைக் காணோமென்று
நலமுடனே வந்தார்கள்.
அரண்மனையுள் நுழைதல்
அரண்மனை தன்னருகே
ஆசார வாசலிலே
கூட்டமிட்டுத் தானிருந்தார்
குடும்பக்கமார் எல்லோரும்.
வீரக்கரையாள ராசாவும்- 1960
வீரமார்த்தாண்ட ராசாவும்
மெச்சும் பெருமாள் பாண்டியரும்
மேகம் போல் வந்திருந்தார்.
மூவர்களும் இருக்கும்போது
முன்னே வந்தார் குடும்பக்கமார்.
கையெடுத்து நமஸ்கரித்தார்
கனகமணி ராசாக்கள்.
நன்றிக்கடன் நவிலல்
வந்தசேதி சொல்லுமென்றார்
வகையுடனே பாண்டியரும்
நாக நல்ல குடும்பனவன்
நலமுடனே ஏது சொல்வான்?
“வடநாட்டுக் கள்ள நாட்டார்
வந்து கொள்ளைப் போட்டார்கள்.
திரவியத்தை வாரியல்லோ
தீவிரமாகப் பொதிகள்வைத்தார்.
கழுதைமேல் பொதிகள் ஏத்தி
கருங்காடு போகையிலே,
கள்ளர்களை அடித்துக் கொன்று கழுதை பொதிகளைக் கீழே
தள்ளி எங்களிடம் வந்து சொன்ன -1980
எசமானைப் பார்க்க வந்தோம்,'
தங்க தளுகை கீழே வைத்து
தலைகுனிந்து வணங்கி நின்றார்.
மன்னர்களின் கோபம்
வீரமார்த்தாண்ட பாண்டியர்க்கு
வீசை துடிக்குதய்யா.
கண்களிலே பொறிபறக்க
கடுங் கோபத்தோட தானழைத்தார்.
மெச்சும் பெருமாளுட
மேன்மையது போச்சுதய்யா.
அண்ணன் தம்பிபோல நாமும்
அரண்மனையில் ஆண்டுவந் தோம்.-1990
கூடி இருந்ததென்ன.
கூட்டுசோறு உண்டதென்ன?
பெற்ற நல்ல பிள்ளைபோல
பிரியமுடன் வைத்திருந்தேன்,
இன்றுமுதல் என்னுடைய இடத்திற்கே ஆகாதே.
.......
(ஐந்து கதைப்பாடல் :1661 - 2000)
மேற்கண்ட கதைப்பாடலின் விரிவான தகவலை அடுத்த பதிவில் காண்போம்....
இராமமூர்த்தி குடும்பன்
Comments
Post a Comment