குடும்பனின் பூர்வீகத்தை

 "குமரிக்கண்டம் "


தென்கோடியில் இருந்த தமிழர்களின் பண்டைய நகரம் ஒன்று கடலுக்குள் மூழ்கியதா.?


இது உண்மையா.? கற்பனையா.?


ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கூறும் நல்லுலகில் பரபரப்பாக பேசப்படும் விடயம் இது.


குமரிக்கண்டம் உண்மைதான் என்னும் கருதுகோள் கொண்ட ஒரு பிரிவினர்..


இல்லவே இல்லை.

அது ஒறு கற்பணைக் கதை என்று மறுப்பவர்கள் ஒரு பிரிவினர்..


இரண்டுபிரிவிலும் ..

தமிழ் அறிஞர்கள்! ஆய்வாளர்கள் ,

விஞ்ஞானிகள் தங்களது பலமான வாத பிரதிவாதங்களை பதிவு செய்துள்ளார்கள்.


குமரிக்கண்டம் என்பதை ஏற்பவர்கள் உணர்வயப்படுபவர்கள். எல்லோராவில் உள்ள கைலாசநாசர் கோவில் படத்தைப்போட்டு கடலுக்குள் மூழ்கிய குமரிப்பகுதி என்று அடித்துவிடுகிறார்கள்.


குமரிக்கண்டம் என்பதை மறுப்பவர்கள் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கிறார்கள். கணிப்பொறியில் உருவாக்கப்பட்ட கலர் கலர் படங்களை போட்டு, கண்டம், திட்டு, நகர்வு என்று பாடம் நடத்தி, புதுப்புது விஞ்ஞான வார்த்தைகளுடன் பொருத்தமே இல்லாத புரளிகளை அறிவியல் என்ற பெயரில் அவிழ்த்துவிட்டு குமரிக்கண்டம் கற்பனை என்பார்கள்.


உண்மைதான் என்ன ?

இதை எவ்வாறு உறுதி செய்வது?


குமரிக்கண்டம் கருதுகோளுக்கு ஆதாரமாக இருப்பது #பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் மட்டுமே.


கடைச்சங்க காலத்திற்கு 

முந்தைய பாண்டியர்கள் என்னும் வரிசையில் வருபவர்  

"#வடிம்பலம்ப_நின்ற_பாண்டியன் " என்பவராவார். 

இவரது அரசபையில்தான் 

#தொல்காப்பியர் தனது தொல்காப்பிய நூலை அரங்கேற்றம் செய்தார் என்பது யாவரும் அறிந்த செய்தி..


இப்பாண்டியனை .. 

#நெடியோன் என்று 

மதுரை காஞ்சி கூறுகிறது. 

( வரிகள் 60 -61)


குமரி நாட்டில் #பஃருளி என்னும் ஆறு ஒன்றை புதிதாக வெட்டி கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தார் என்னும் செய்தியை  

#புறநானூறு பதிவுசெய்கிறது.


குமரி முனையின் தெற்குப்பகுதி #கடல்_கோளால் அழிவதற்கு முன்பு, குமரிநாட்டில் பஃருளி என்ற ஆற்றை வெட்டிவித்து கடல் அம்மனுக்கு விழா எடுத்தார்.


"முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர் பஃருளி மணலினும் பலவே  

( புறம் - 9 )


#சிலப்பதிகாரத்திலும் 

குமரியை கடல் கொண்ட நிகழ்வு பதிவு செய்யப்படுகிறது.


தொல்லியல் ஆவணங்களான #பாண்டியர்களது செப்பேடுகளிலும் ஒரு நகரம் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.


தென்கோடியில் உள்ள பாண்டியர்களின் பழமையான 

நகரம் ஒன்று #ஆழிப் பேரலையால் கடலுக்குள் மூழ்கிய செய்தியை பாண்டியர் செப்பேடுகள் 

#பதிவு செய்கின்றன.


இலக்கியம், தொல்லியல் சான்றுகளை உறுதி செய்ய 

குமரிப் பகுதியில் கடல் அகழாய்வு செய்தால்தான் குமரி கடலுக்குள் மூழ்கிய தொல் நகரம் பற்றிய செய்தியை உறுதி செய்யமுடியும்.


உலகத்தின் பல பகுதிகளில் 

கடல் அகழாய்வு செய்யப்பட்டதில் கடலுக்குள் மூழ்கியிருந்த பல தொல் நகரங்கள் வெளிப்பட்டன.


மத்தியதரைக்கடல் 

இஸ்ரேல் கடற்கரையில் உள்ள 

8000 !ஆண்டுகள் பழமையான 

அவிட் - யாம் நகரம்.கிரிஸ் நாட்டில் உள்ள 5000 ஆண்டுகள் பழமையான பாவ்லோபெட்ரி நகரம். கருங்கடலுக்குள் மூழ்கியிருந்த பண்டைய கிரேக்கத்தின் பனகோரியா நகரம். பண்டைய ரோமின் பையா நகரம். ஜமைக்கா நாட்டின் போர்ட்ராயல் என்னும் பழங்கால நகரம்.


இதுபோன்ற பல பழமையான நகரங்கள் கடல் அகழாய்வின் மூலம் வெளிப்பட்டிருந்தன.


இதைப்போன்று ஒரு கடல் அகழாய்வு தென்குமரிப் பகுதியில் நடக்கவேண்டும் என்பது 

40 ஆண்டுகால கோரிக்கையாகும்.


கடந்த 2020 ஆம் ஆண்டு 

மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் குமரிப்பகுதியை கடல் அகழாய்வு செய்ய வலியுறுத்தி பழனியைச் சேர்ந்த நாரயணமூர்த்தி என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


வழக்கு விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு 

வரலாற்று அறிஞர் #ஒரிசா_பாலுவை உயர்நீதிமன்றத்து உதவும்படி உத்திரவிடப்பட்டது.


நீதியரசர்கள் ஜி.ஜெயச்சந்திரன், .

கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.


ஐந்தாண்டு தொடர் விசாரனையில் -

 2025 ஆண்டு டிசம்பர் மாத இறுதி விசாரணையில்...


அரசு தரப்பு வழக்கறிஞர் -

 கடலுக்குள் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வேண்டும் என்றார்.


மத்திய தொல்லியல்துறை வழக்கறிஞர் - குமரி கடல் அகழாய்வு குறித்து இதுவரை மாநில அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை. கோரிக்கை மனு அனுப்பினால் பரிசீவிக்கப்படும் என்றார்.


இறுதி தீர்ப்பில் நீதிபதிகள் -

 குமரி கடல் அகழாய்வு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை 

தமிழக அரசு எடுக்கும் என்று #நீதிமன்றம் நம்புகிறது.


இவ்வாறாக இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசின் அடுத்த அறிவிப்பு குமரி கடல் ஆய்வு குறித்தாக இருக்கும். விரைவில் குமரிப்பகுதியில் கடல் அகழாய்வு தொடங்கும்.


========================


அன்புடன் -

மா.மாரிராஜன்.

Marirajan Rajan

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்