குடும்பர்களின் புரிதலுக்கு

 "அறுவடை செய்யத் தெரியாதவன் விதைப்பது வீண்..!"


"விதைப்பது மட்டும் வினையல்ல; விளைச்சலை அறுவடை செய்வதுதான் வீரம்!"


இந்தக் கூற்று, காலங்காலமாக மண்ணையும், மானத்தையும் நம்பி வாழும் ஒவ்வொரு வேளாண்குடிக்கும் பொருந்தும். விடியும் முன் வயலுக்கு ஓடினால் மட்டும் அறுவடை கிடைத்துவிடாது. இன்று நாம் அறுவடை செய்ய வேண்டுமானால், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே நிலத்தைப் பண்படுத்தி, களைகளைக் களைந்து, வஞ்சகமான புதர்களை அகற்றி, விதைக்கான தகுதியை அந்த மண்ணிற்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.


வெறும் மண்ணில் விதையைத் தூவுவதல்ல விவசாயம்; எந்த நிலத்தில், எந்தக் காலத்தில், எதை விதைத்தால் இனம் வாழும் என்று தீர்க்கமாகத் தெரிந்திருக்க வேண்டும். விதைத்த பின், அது களைகளின் பிடியில் சிக்காமல் காக்க வேண்டும்; வறட்சி எனும் துரோகம் சூழ்ந்தாலும், ஊட்டச்சத்து எனும் நம்பிக்கையைக் கொடுத்துக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும். 


இத்தனை துன்பங்களுக்குப் பிறகும், கதிர்கள் முற்றி அறுவடைக்கு வரும்போது, களவாடத் துடிக்கும் கயவர்களிடமிருந்து காக்கும்  ஆற்றல் வேண்டும்.


அறிவு, ஆற்றல், துணிச்சல் - இந்த மூன்றையும் கையில் ஏந்தத் துணிந்தவன் மட்டுமே விதையைத் தொடுவதற்குத் தகுதி பெற்றவன். இதைப் பற்றி எதுவுமே சிந்திக்காமல், நோக்கமே இல்லாமல் விதைகளைத் தூவுவதில் என்ன பயன்? விவேகமற்ற விதைப்பு, வீணாகிப் போகும்.


இதுவரை நாம் கடந்து வந்த பாதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதுவரை நாம் களத்தை மட்டுமல்ல நம்மையும்தான் தயார் படுத்தி வந்தோம். இனி  நமக்கான அறுவடைக்காலம் தொடங்கிவிட்டது. வரும் மார்ச் 21 அன்று சென்னையில் இருந்து நமது போர் முரசு கொட்டப் போகிறது.


யார் ஒருவர் அறுவடைக்கு  துடிக்கிறாரோ, யார் நெஞ்சில் தமிழினத்தின் விடுதலையே வேட்கையாக இருக்கிறதோ, அவர்கள் மட்டும் சென்னைக்கு வாருங்கள். மற்றவர்கள் தாராளமாக வீட்டிலேயே அமர்ந்து "தமிழர் தேசிய ஒளியூட்டி" நாளைக் கொண்டாடலாம். நமக்குத் தேவை உணர்ச்சிக் குமுறல்கள் அல்ல; அறுவடை செய்யத் துடிக்கும் உறுதியான கரங்கள்!


பிறகு நாங்கள் அழைக்கும் அந்த நன்னாளில், களத்து மேட்டிற்கு வாருங்கள்; வெற்றியைக் கூடி கொண்டாடுவோம்!


சென்னைக்கு வரும் தோழர்கள், உங்கள் பயணத்தை உறுதி செய்துவிட்டீர்கள் என நம்புகிறேன். நம்மோடு  நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயணிக்க விரும்பும், குறிப்பாகச் சென்னையைச் சுற்றியுள்ள  நண்பர்களை தோழர்களை நிகழ்ச்சிக்கு அழையுங்கள்...


இன்றைய அரசியல் களம், நமக்கான அறுவடைக்காகக் காத்திருக்கும் பெரும் பொற்காலம். வாய்ப்புகள் நம் வாசலில் வந்து வட்டமடிக்கின்றன.


ஆகையினால் அறுவடைக்குத் தயாராகுங்கள் மக்களே! 

வரலாறு நம்மைக் குறிப்பெடுக்கட்டும். 

மீண்டும் ஒருமுறை "செங்கோல்" மீட்ட பாண்டியர்களாக, 

தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கட்டும். 


வாருங்கள் சென்னைக்கு  

வரலாறு எழுதுவோம்...! நன்றி..


*தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்*


*இடம்:*

இக்சா அரங்கம்,

எழும்பூர், சென்னை.


*நாள்:* 

21 - மார்ச், 2026,

சனிக் கிழமை,

மாலை 4 மணிக்கு.


அனைவரும் வருக ...!


*இவண்,*

தமிழர் நடுவம்,

சென்னை.

+91 76395 11606


#செல்வாபாண்டியர்

#தமிழர் 

#தேசியம் 

#தந்தை 

#தமிழர்_தேசியத்_தந்தை

#தமிழர்_தேசிய_ஒளியூட்டி

#ஒளியூட்டி 

#மார்ச்21

#தமிழர்_தேசிய_ஒளியூட்டி_நாள்

#நடுவம் 

#தமிழர்நடுவம்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்