சிங்கன் மகன்
உங்கள் இயல்பை ஒத்த சிந்தனையில் நீங்கள் செயல்படும் போது நீங்கள் ஆதிக்கம் மிக்கவர்களாக இருக்கிறீர்கள், இயல்புக்கு ஒத்து வராத விசயங்கள் உங்கள் தலையில் சுமத்தப்படும் போதும், விவரம் அறியாமல் நீங்கள் அதை தூக்கி சுமக்கும் போதும் எதிரிகளால் எளிதாக வேட்டையாட படுகிறீர்கள், உங்கள் இயல்பு என்ன...?
இங்கே இயல்பு என்று சொல்வது உங்கள் மரபணுவோடு நேரடி தொடர்புடையது, நீங்கள் கழுதை புலியா சிங்கமா என்பதை தீர்மானிப்பது, அது பல்லாயிரம் தலைமுறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நிலை....!?!
நீங்கள் சிங்கமாக இருந்துகொண்டு புரச்சி பேசினாலோ அல்லது கழுதை புலியாக இருந்து கொண்டு ஆள நினைத்தாலோ இரண்டுமே தவறாகி போகும், புலி புரச்சி பேசும் என்றால் கழுதை புலி குணம் களவையே கௌரவமாக பேசும், அவர்கள் களத்தில் அவர்கள் தான் ஆதிக்கத்தோடு இருப்பார்கள், நீங்கள் சிங்க குணத்தோடு இருந்துகொண்டு புரச்சி பேசினாலோ, அல்லது வன்முறையை கையில் எடுத்தாலோ எளிதில் நீங்கள் வீழ்த்தப் படுவீர்கள்...!?!
ஒரு சிங்க கூட்டத்தை பல நூறு வருடம் புரச்சி சிந்தனையில் சிக்க வைத்து அவர்களை போராளிகளாக மாற்றவும் முடியும், அதே சமயம் ஒரு ஹைனா கூட்டத்திற்கு ஆளும் வர்க்க சிந்தனையை ஊட்டி அதிகாரத்திலும் அமர்த்த முடியும், நீங்கள் யார், உங்கள் தலையில் எந்த சிந்தனையை சுமக்க வைத்திருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள், உண்மை புரிந்து விடும்...!
#சிங்கன் #சிங்கன்_மகன்
Comments
Post a Comment