குடும்பனின் அறிவுரை மகனுக்கு
மகனே பாண்டியா....!
இன்று உனது எட்டாவது அகவையில் அடி எடுத்து வைக்கிறாய், இந்த எட்டு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது, இருந்தாலும் இந்த வருடம் நிகழ்ந்திருக்கும் மாற்றம் மிகவும் முக்கியமானது, ஒரு வகையில் நமக்கும் சாதகமானது...!
அடுத்த 20 வருடங்களில் நீ அடையப் போகும் இலக்கை இலகுவாக்கி தந்திருக்கிறது இந்த மாற்றம், #இன அரசியல் என்றால் என்ன என்கிற அடிப்படை கூட புரியாத #தமிழர்கள் மத்தியில் #திராவிடர்கள் செய்து வந்த இன #வெறி அரசியலுக்கு வலுவான அடி விழுந்திருக்கிறது, இதுவரை ஆரிய திராவிடர்களின் கட்டமைப்பில் இருந்து வந்த பல கற்பிதங்கள் உடைபட்டு இருக்கிறது, அந்த இறுக்கம் தளர்ந்திருக்கிறது, இது நமக்கு சாதகமானது தானே....!?!
மகனே #பாண்டியா தற்போது #பெரும்பான்மை பெற்று அதிகாரத்தில் அமரப் போகிறவர்கள் எப்படி ஆட்சி செலுத்துவார்கள் என்பது நமக்குத் தெரியாது, அவர்களுக்கும் ஏதேனும் மறைமுக #அஜெண்டா இருக்கிறதா என்பதும் நமக்குத் தெரியாது, ஆனால் #பல்லாண்டு காலமாக வலுவாக இருந்த ஒரு கட்டமைப்பு தகர்ந்திருக்கிறது, அதை மீள் கட்டமைப்பு செய்ய விடாது பார்த்துக் கொண்டாலே போதும் நமக்கு பாதி வெற்றிதான்....!!!
புதிதாக வந்திருப்பவர்கள் என்ன அஜெண்டாவோடு வந்திருக்கிறார்கள், என்ன மாதிரியான அரசியலை கட்டமைக்கப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் என்ன கட்டமைத்தாலும் அதையும் தகர்க்க முடியும் என்கிற நம்பிக்கையையும் அவர்களே தந்திருக்கிறார்கள், 60 ஆண்டு கால கட்டமைப்பையே தகர்க்க முடியும் போது 20 ஆண்டு கால கட்டமைப்பை தகர்க்க முடியாதா என்ன, அந்த #நம்பிக்கை மகத்தானது மகனே...!!!?
ஒரு நம்பிக்கை போதும் ஒரு மாபெரும் கனவை நிகழ்த்தி காட்டிவிட முடியும், ஒரே ஒரு ஆழமான கனவு போதும் நிகழ்காலத்தையே கூட #திருத்தி நமக்கு சாதகமான வரும் காலத்தை நிகழ்த்தி காட்டிவிட முடியும், நமக்கும் ஒரு கனவு இருக்கிறது மகனே, அதை உனக்கு சொல்ல காலமும் இருக்கிறது...!!!
இந்த ஆரியமும் திராவிடமும் இன்னும் கூடுதலாக வலிமையாவதை தடுக்கும் செயலாகவே காலம் இந்த மாற்றத்தை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது மகனே, கிடைத்த இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்வதில் தான் நமது #புத்திசாலித்தனம் உள்ளது, அந்தப் புத்திசாலித்தனத்தின் கைகளில்தான் இனத்தின் எதிர்காலம் இருக்கிறது, இப்போது சொல் இது எவ்வளவு முக்கியமான நிகழ்வு....??!!
வரலாற்றில் #தென்பாண்டி கடலில் மூழ்கி முத்தெடுத்த நம் முன்னோர்களான #பாண்டியர்கள் தங்களின் அடுத்தடுத்த இரண்டு மூச்சுகளுக்கு இடையிலான இடைவெளியில் தான் அதை சாதித்திருக்கிறார்கள், அதைக் கொண்டு உலகம் முழுவதும் தனித்த வியாபார ஆட்சியையே நடத்தி இருக்கிறார்கள், அப்படியானால் அவர்கள் எவ்வளவு நேரம் நீருக்குள் மூச்சடைக்கி தாக்கு பிடித்து இருந்திருக்க வேண்டும், எதுவும் ஒரே நாளில் நடந்து விடாது மகனே, அதே போல் நடத்திக்காட்ட முடியாததுவும் எதுவும் இல்லை, எல்லாமே முறையான பயிற்சியாலும் போதுமான துணிச்சலாலுமே சாத்தியமாகிறது, #துணிச்சல் அது நமக்கு எப்போதும் இருக்கிறது, கிடைத்திருக்கும் இந்த இடைவெளியை நமது பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்ளுவோம், நீ பயின்று வா, மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்....!!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #மகனே....☯️
Comments
Post a Comment